இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
குழந்தைகளுக்கு சத்தான மிகவும் சுவையான ஆப்பிள் பஜ்ஜி செய்வது எப்படி தெரியுமா!இதோ ஈஸியா செய்யலாம் வாங்க...
பழங்களில் அனைவருக்கும் பிடித்தமான பழம் என்றால் அது ஆப்பிள் தான். அதிக சத்துகளை கொண்டதாகவும், மிகவும் சுவையாகவும் உள்ளதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். மேலும் ஆப்பிளில் அனைவரும் ஜூஸ் போட்டும் அறுந்துவர். இங்கு சற்று வித்தியாசமாக ஆப்பிளை வைத்து சுட சுட ஆப்பிள் பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
1.ஆப்பிள் - 1
2. கடலை மாவு - 1 கப்
3. மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
4. மிளகாய்தூள் (விருப்பமானால்) - 1 டீஸ்பூன்
5. எண்ணெய் ( தேவையான அளவு )
6. மேலும் சோடா , உப்பு
செய்முறை விளக்கம்:
முதலில் ஆப்பிளை நன்றாக கழுவி அதில் உள்ள விதைகளை நீக்கி நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பின்பு கடலைமாவை எடுத்து அதனுடன் மஞ்சள்தூள், உப்பு, சோடா மற்றும் மிளகாய் தூள், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர், எண்ணெயை ஒரு வானிலையில் காய வைத்து நறுக்கி வைத்த மெல்லிய ஆப்பிள் துண்டுகளை அந்த பஜ்ஜி மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டு எடுத்தால் மொறுமொறு சுவையான ஆப்பிள் பஜ்ஜி ரெடி.