"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும் பீட்ரூட்.. சுவையான பஜ்ஜி செய்வது எப்படி?..!
பீட்ரூட்டில் அதிக அளவில் வைட்டமின் பி1 மற்றும் இரும்புச்சத்து ஆகியன இருப்பதால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. மேலும், ரத்த ஓட்டத்தை சீராக்கி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
பொதுவாக வீட்டில் வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி மற்றும் உருளைக்கிழங்கு பஜ்ஜி, முட்டை பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி போன்றவைதான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். உங்களுக்கு தெரியாத பீட்ரூட் பஜ்ஜி எவ்வாறு செய்வது என்பதனைப் பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
அரிசிமாவு - 1 தேக்கரண்டி
பீட்ரூட் - 100 கிராம்
மிளகாய் தூள் - 1தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/4 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
★முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி வெங்காய பஜ்ஜிக்கு வெட்டுவது போல், வட்ட வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும்.
★பின், வெட்டிய பீட்ரூட் துண்டை தோசை கல்லில் எண்ணெய் சேர்க்காமல் சிறிது நேரம் போட்டு எடுக்க வேண்டும். இதனால் பஜ்ஜி சுடும் போது அதிகமாக எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
★அடுத்து ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, கடலை மாவு மற்றும் மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு, பேக்கிங் சோடா போன்றவற்றை கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எப்பொழுதும் பஜ்ஜிக்கு மாவு கரைப்பதை போல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
★இறுதியாக வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பின், அதில் நாம் வெட்டி வைத்த பீட்ரூட் துண்டை மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து பரிமாறினால் சுவையான சத்தான பீட்ரூட் பஜ்ஜி சிலநிமிடங்களில் தயாராகிவிடும்.