மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரத்த சிவப்பணு அதிகரிக்க, இரும்புசத்து கிடைக்க பீட்ரூட் கேரட் சூப்.!
பலவகையான சத்துக்களை அதிகம் பீட்ரூட்-கேரட் சூப் எவ்வாறு சமைப்பது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
பீட்ரூட்டில் அதிக அளவில் இரும்புசத்து மற்றும் வைட்டமின் சத்துகள் இருக்கின்றன. எனவே, இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. அத்துடன் கிட்னியில் கற்கள் உருவாவதையும் தடுக்கிறது. தொடர்ந்து கேரட் அதிகமாக சாப்பிடுவதன் மூலம் ரத்த கொழுப்பு குறைவதற்கு உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 2
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
பூண்டு பல் - 5
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பீட்ரூட் - 2
காய்கறி சத்து நீர் - 7 கப்
கேரட் - 1/4 கிலோ
செய்முறை :
★முதலில் கேரட்டை முழுவதுமாக சுத்தம் செய்து, தோலை நீக்கி மெலிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
★அடுத்து பீட்ரூட், இஞ்சியை நறுக்கி தனியாக எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
★அதனுடன் கேரட், இஞ்சி, பீட்ரூட் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வதக்க வேண்டும். பின் காய்கறி சத்து நீரை சேர்த்து 25 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும்.
★இறுதியாக அனைத்தும் நன்றாக வெந்த பின், ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவேண்டும். பின் அரைத்த விழுதினை சிறிது அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு மிளகுத்தூள், உப்பு சேர்த்து பருகினால் சுவையான பீட்ரூட்- கேரட் சூப் தயாராகிவிடும்.