மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதினால் இவ்வளவு நன்மைகளா.?
அன்றாட வாழ்வில் உணவு பழக்க வழக்கங்களும் சீரற்ற வாழ்க்கை முறையும் உடலில் பல்வேறு நோய் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நம் உணவு பழக்க வழக்கத்தில் ஒரு சில சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயற்ற வாழ்வை வாழலாம்.
நோய் தாக்கத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக பீட்ரூட் சிறந்த உணவாக கருதப்படுகிறது.
பீட்ரூட்டை நம் உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பெருகும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். கர்ப்ப காலத்தில் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் இருக்கும் சிசுவிற்கும் நல்லது.
பீட்ரூட்டை சமைத்து சாப்பிடுவதை விட ஜூஸ் ஆக குடிப்பது மிகவும் நல்லது. இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ரத்த நாளங்களை விரிவுபடுத்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் அன்றைய நாளில் சுறுசுறுப்பாக செயல்படவும் முடிகிறது.