நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் டீடாக்ஸ் பானம்.. எப்படி செய்யலாம்.!?



Health benefits of drinking detox drink

நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பானம்

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நச்சுகளை நீக்குவதற்கான சூப்பர்பானத்தை பொதுவாக "Detox Water" அல்லது "Detox Drink" என அழைக்கப்படுகிறது. இது உடலின் நச்சுப் பொருட்களை நீக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த டிடாக்ஸ் பானத்தில் உடலுக்கு தேவையான சிறந்த மூலிகைகளைப் பயன்படுத்தி, பழங்கள் மற்றும் மருந்துகளின் கலவையால், உடலுக்கு தேவைப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Detox drink

இந்த பானங்கள் உடலில் உள்ள நச்சுகளை நீக்கி உடலை சுத்தப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. இது பெரும்பாலும் இயற்கை பொருட்கள் மற்றும் சத்துக்கள் கொண்டது. மேலும் எளிய முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில்  தயாரிக்கப்படுவதால் இது உடலில் பல வகையான நோய்களை குணப்படுத்தும். குறிப்பாக நச்சுகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதையும் படிங்க: தலைமுடி உதிர்வு பிரச்சனையா.? இந்த பாரம்பரிய எண்ணையை ட்ரை பண்ணி பாருங்க.!?

டீடாக்ஸ்

பானம் செய்ய தேவையான பொருட்கள் :

1/2 லிட்டர் தண்ணீர்
1/2 எலுமிச்சை (சாறாக )
1 கப் - பச்சை ஆப்பிள் (துண்டுகளாக)
1 இஞ்சி துண்டு (நன்றாக அரைத்தது)
1/2 ஸ்பூன் சிறு புளி
1 ஸ்பூன் தேன் (விரும்பினால்)

செய்முறை

முதலில் பாத்திரத்தில் தண்ணீர்  ஊற்றி எலுமிச்சை சாறு, ஆப்பிள் துண்டுகள் மற்றும் அரைத்த இஞ்சி கலவையை சேர்க்கவும். பின்னர் புளி மற்றும் தேனைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனை 30 நிமிடங்கள் அல்லது 1 மணி நேரம் அப்படியே வைக்கவும், இதில் உள்ள சத்துகள் தண்ணீரில் பரவியிருக்கும். பின்னர் இதனை வடிகட்டு தினமும் காலையில் அருந்தவும்.

Detox drink

டீடாக்ஸ்

பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?

1. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.
2. கடுமையான உடற்பயிற்சியின் பிறகு இந்த டீடாக்ஸ் பானத்தை குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
3. டீடாக்ஸ் பானத்தை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்பதோடு, இதை குடித்த பின் அரை மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது.
4. இந்த பானம், நுரையீரல் மற்றும் உடல் முழுவதும் உள்ள நச்சுகளை நீக்கி, உங்களுக்கு ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதையும் படிங்க: மழைக்காலத்தில் தொண்டைக்கு இதமாக துளசி ரசம்.! எப்படி செய்யலாம்.!?