தினமும் சப்பாத்தி சாப்பிடுவதனால் என்னென்ன சத்துக்கள் கிடைக்கும் தெரியுமா.?



Benefits of eating wheat chappathi daily

பொதுவாகவே நவீன காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு சத்துக்கள் இல்லாமலும், சீரற்ற வாழ்க்கை முறையும் பல நோய் தாக்கங்களை நம் உடலில் ஏற்படுத்தி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் சாதாரண சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Wheat

இது போன்ற நிலையில் சில சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் பல்வேறு வகையான சத்துக்களை பெறலாம். அதாவது நாம் அடிக்கடி கோதுமை மாவில் தயாரான சப்பாத்தியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Wheat

புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ள கோதுமை மாவு சப்பாத்தி தினமும் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நீரழிவு நோய், இதய நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுவதை தடுக்கிறது என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.