நாள்தோறும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் என்ன நன்மை நடக்கும் தெரியுமா.?



benefits-of-fennel-water

சோம்பில் அதிகம் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் உள்ளதால் அவற்றை தினமும் பருகி வரும் போது எண்ணற்ற நன்மைகள் நமது உடலுக்கு ஏற்படுகின்றது. அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

1. தினமும் வெறும் வயிற்றில் கொதிக்க வைக்கப்பட்ட சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறையும்.

2. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

3. பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

Fennel water

4. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடித்தால் வயிற்றில் ஏற்படும் வீக்கங்கள், வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

5. பெண்கள் தினமும் சோம்பு தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடிவயிற்றுவலி பிரச்சினை குணமாகும். மேலும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு தம்பளர் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.