"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
"தலைமுடிப் பிரச்சனைக்கு இந்த ஒரு பொருளில் இருக்கு தீர்வு!"
காலநிலை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வு மற்றும் இளநரை ஆகியவை ஆகும். தலைமுடியை இயற்கையான முறையில் ஆரோக்கியமாகப் பராமரிக்க இஞ்சி பெரிதும் உதவுகிறது.
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது மயிர்க்கால்களைத் தூண்டி, உச்சந்தலையில் சுழற்சியை ஏற்படுத்துகிறது. இதிலுள்ள ஏராளமான தாதுக்கள், விட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் முடியை வலுப்படுத்துகின்றன.
ஷாம்பூவில் சிறிது புத்தம் புதிய இஞ்சியை சேர்த்து உச்சந்தலையில் மசாஜ் செய்வதால் முடி உதிர்தல் மற்றும் பொடுகுப் பிரச்சனைகள் தீரும். இஞ்சி ஒரு இயற்கையான கண்டிஷனர் ஆகும். இது மயிர்க்கால்களை சேதமாகாமல் காப்பாற்றி தலைமுடியின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.
இஞ்சியை அரைத்து அதன் சாற்றை வடிகட்டி அதனுடன் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணையை கலந்து வேர்க்கால்களில் இருந்து தலைமுடி முழுவதும் தடவி மசாஜ் செய்து 30நிமிடங்கள் ஊறவிட வேண்டும். இப்படி இஞ்சியை நேரடியாக தலையில் தடவுவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.