தினமும் பிஸ்கட் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.? உடனே இதை படியுங்கள்!!



Biscuits eating side effects

இன்று குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவாக பிஸ்கட் மாறியுள்ளது. அப்படியாக விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

பிஸ்கட்டில் அதிகப்படியான சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இதனால் சர்க்கரை நோய், இதயப்பிரச்சனைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவை ஏற்படலாம்.

Biscuits

பிஸ்கட்டில் சோடியம் பை கார்பனேட் எனப்படும் உப்பு அதிகளவு உள்ளது. இதனால் உடலில் சோடியம் அதிகமாகி உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் ஏற்படும். மேலும் அதிகளவு பிஸ்கட் சாப்பிடுபவர்களுக்கு கெட்ட கொழுப்பு அதிகரித்து உடல் எடை அதிகரித்து விடுகிறது.

சிறுவயதிலேயே பிஸ்கட் சாப்பிடப் பழகுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினமும் பிஸ்கட் கொடுத்தனுப்பினால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகிறது.