பெண்களே எச்சரிக்கை!!! 30 வயதிற்கு மேல் கர்ப்பமாகும் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்...!



breast-cancer-in-women-over-30-years-of-age

இன்று பெண்களை அதிகமாக தாக்கும் நோய்களில் மார்பக புற்றுநோய் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்கள் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண் அறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும் ஒரு நோயாகும். நம் உடலில் கட்டியாக தோன்றுவதெல்லாம் புற்றுநோய் கட்டிகள் அல்ல.

இதனை கண்டறிவதில் சில பெண்களுக்கு காலதாமதம் ஏற்படுவதால் இந்நோயை குணப்படுத்துவதில் சற்று சிக்கல் ஏற்படுகிறது. சில வழிமுறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் இந்த மார்பக புற்றுநோயிலிருந்து நம் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Breast Cancer

1. பெண்கள் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் மேலும் அதிக உப்பு மற்றும் அதிகளவு சர்க்கரை நிரம்பிய உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

2. பெண்கள் மார்பக புற்றுநோய் வராமல் இருக்க தினசரி சிறிது நேரமாவது யோகா மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

3. பெண்கள் மார்பக கேன்சர் வராமல் இருக்க உடல் எடையை கட்டுக்குள் வைக்க பரிந்துரைக்கப்படுகின்றன.

4.பெண்கள் மார்பக புற்று நோய் வராமல் இருக்க குறைந்தது 30 வயதிற்கு உள்ளேவாகிலும் ஒரு முறையாவது கர்ப்பம் அடைந்திருக்க வேண்டும்.      5.பெண்கள் மார்பக நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம் கொடுத்திருக்க வேண்டும். மேலும் இது மார்பகப் புற்று நோய்க்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.மேலும் நம் உடலில் அதிக ஹார்மோன் உற்பத்தி, கருவுறாமை சிகிச்சை, கர்ப்பப்பை தூண்டுதல்,மாதவிடாய்  பிரச்சனைகள் இவை அனைத்தும் மார்பகப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணங்களாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்