50 வயதிலும் இளமையாக துள்ளி குதிக்க இந்தக் கீரையை மட்டும் சாப்பிட்டு பாருங்க.!?



Healthy benefits of eating keerai

ஊட்டச்சத்தான உணவுகள்

பொதுவாக அன்றாடம் நாம் வீட்டில் உண்ணும் உணவுகளில் பல வகை உணவுகள் ஊட்டச்சத்து மிகுந்தவையாக இருந்து வருகின்றன. இதில் குறிப்பாக நாம் வீட்டில் சமைத்து உண்ணும் கீரை வகைகளில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு கிடைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இதில் புளிச்சக்கீரை உண்ணும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.

Food

புளிச்ச கீரையில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதில் தலை முதல் கால் வரை உடல் உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே கிடைத்து விடுகின்றன. புளிச்ச கீரை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதால் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது என்பதையும், என்னென்ன நோய்கள் குணமாகிறது என்பதை குறித்தும் இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைலில் தோசைக்கு புளி சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! சுவை வேற லெவலில் இருக்கும்.!?

புளிச்சகீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

1. வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பவர்கள் புளிச்சக்கீரையை மதிய நேரத்தில் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் அமிலத்தன்மை குறைந்து, செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற நோய்கள் குணமடைகிறது.
2. வயதானவர்களுக்கு கால் கைகளில் நீர் கோர்த்து வலி ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் புளிச்ச கீரையை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் வீக்கம், நீர் கோர்த்தல், கை, கால் வலி போன்றவை குணமடையும்.
3. அடிக்கடி பசியை தூண்டி செரிமானத்தை சீராக்குகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
4. இதில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, நிரம்பி இருப்பதால் எலும்புகளுக்கு ஊட்டச்சத்தை அளித்து 50 வயதிலும் துள்ளிக் குதிக்க வைக்கும் இளமையை தருகிறது.

Food

5. மங்கலான கண்பார்வையை சரி செய்து தெளிவான கண்பார்வை கிடைக்க வழிவகை செய்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய புளிச்சக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தினமும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகளா.!?