ஹோட்டல் ஸ்டைலில் தோசைக்கு புளி சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! சுவை வேற லெவலில் இருக்கும்.!?



Recipes for hotel style chutney for dosai

ஹோட்டல் ஸ்டைலில் புளி சட்னி 

பொதுவாக நம்மில் பலரது வீட்டிலும் காலை மற்றும் இரவு உணவுக்கு இட்லி, தோசை தான் பெரும்பாலான வீட்டில் சமைக்கிறார்கள். இந்த இட்லி, தோசைக்கு தினமும் ஒரே மாதிரி சட்னி, சாம்பார் செய்வதால் குழந்தைகளுக்கு சாப்பிட சலிப்பாக இருக்கும். எனவே சுவையான புளி சட்னி கொஞ்சம் வித்தியாசமாக இப்படி செய்து பாருங்கள்?

dosa

தேவையான

பொருட்கள்

செய்முறை

புளி, பூண்டு, வர மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு - தேவையான அளவு
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வர மிளகாய், பூண்டு போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு சின்ன வெங்காயம் மற்றும் புளி சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து அரைத்து வைத்த சட்னியை அதில் ஊற்றி தாளித்து எடுத்தால் சுவையான புளி சட்னி தயார்.

இதையும் படிங்க: தினமும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகளா.!?

dosa

இந்த சட்னியை தோசை சுடும் போது தோசையின் மீது தேய்த்து எண்ணெய் ஊற்றி முறுகலாக எடுத்தால் சுவையான சிவப்பு நிற மொறு மொறு தோசை தயார். இவ்வாறு தோசை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி எத்தனை தோசை வேண்டுமானாலும் சாப்பிடுவார்கள்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான உருளைக்கிழங்கு சீஸ் ஆம்லெட் எப்படி செய்யலாம்?