மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"தொப்பையைக் குறைக்க உதவும் பானங்கள்!"
தற்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் உள்ள பெரிய பிரச்சனை உடல் பருமன் மற்றும் தொப்பை. இதன் காரணமாக பல்வேறு நோய்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் ஜிம் செல்வது எதுவும் சிலருக்கு பயனளிப்பதில்லை.
எனவே சில இயற்கையான, எளிமையான பானங்கள் மூலம் உடல் எடையைக் குறைப்பது எப்படி என்று இங்கு காண்போம். குறைந்த கலோரி கொண்ட பானகமான சீரக நீர் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. இது பசி உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.
எலுமிச்சை நீரில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. இவை வேகமான எடை இழப்புக்கு உதவுகின்றன. தினமும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை அருந்தலாம். மேலும் மல்லி தண்ணீர் குடிப்பதால் உடலில் சேரும் கெட்ட கொழுப்பு குறைகிறது.
தனியாவை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி குடிக்கவேண்டும். மேலும் சோம்பையும் இரவு முழுதும் ஊறவைத்து காலையில் அதை கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான பதத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.