மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
20-லிருந்து- 30 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களே.. இனி இந்த தப்பை பண்ணாதிங்க.!
பணத்திற்கும் வயது இருக்கும் தொடர்பு உண்டா என்று கேட்டால் உண்டு தான். வயதிற்கு ஏற்ப நமது பழக்க வழக்கங்கள் எப்படி மாறுகிறதோ அதுபோல நம்முடைய செலவு முறைகளும் மாறுகிறது. குறிப்பாக 20-லிருந்து 30 வயதிற்குள் பணத்தை கையாளுவதில் திறமையாக இல்லை என்றால் நிச்சயம் அதற்குப் பிறகு நாம் கஷ்டப்படுவோம். வேலைக்கு சென்று சம்பாதிக்கும் 30 வயதுக்குட்பட்டவர்கள் சம்பள பணத்தை, வெகுசீக்கிரம் செலவழித்து விடுகின்றனர்.
நிதி நிர்வாகம் தெரியாமல் எப்படி செலவாகியது என்றே தெரியாமல் கேள்விக்கேட்டால், விழிப்பார்கள். ஐஃபோன், இயர்ஃபோன், பைக் என கண்டபடி செலவு செய்வார்கள்.
இந்த காலகட்டத்தில் அதிக வருமானத்தை ஈட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இந்த கட்டத்தில் நாம் பயமில்லாமல் ரிஸ்க் எடுத்து தொழிலில் ஈடுபடலாம். அவசிய தேவைகளுக்கு மட்டுமே சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்ய வேண்டும். நமது சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிப்பு மற்றும் முதலீட்டில் செலவழிக்க வேண்டும்.
கடன் ஏதாவது இருந்தால் முதலில் அதை அடைப்பது மிக முக்கியமானது. புதிதாக கடன் வாங்கி அந்த கடனை அடைக்க முயலக் கூடாது. எதிர்பாராத நேரத்தில் பணி இழப்பு ஏற்படலாம். திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே அந்த நேரத்தில் சமாளிக்க நம்மிடம் சேமிப்பு இருக்க வேண்டியது அவசியம். பங்குச்சந்தை, தங்கம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட அளவற்றிலும் இந்த காலகட்டத்தில் நாம் முதலீடு செய்தல் வேண்டும்.