தெரியுமா?? மாம்பழம் சாப்பிட்ட உடனே இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது!! பலருக்கும் தெரியாத முக்கிய தகவல்..



Foods should avoid after eating mango in tamil

மாம்பழம் சாப்பிட்டதும் கட்டாயம் சாப்பிடக்கூடாது சில உணவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

பழங்களில் மிகவும் சுவையான ஒன்று மா. மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருப்பார்களா என்றால் அதற்கு வாய்ப்பு குறைவுதான். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு எப்போதுமே மவுசு அதிகம்தான். சரி, விஷயத்துக்கும் வருவோம். மாம்பழம் சாப்பிட உடனே சாப்பிடக்கூடாத சில உணவுகளையும், அதற்கான காரணம் குறித்தும் பார்ப்போம்.

1 . நீர்:

மாம்பழம் சாப்பிட உடனே நீர் அருந்துவதால் வயிற்றுவலி, அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்ட வாய்ப்பு அதிகம். ஆகையால் மாம்பழம் சாப்பிட்ட அடுத்த அரைமணி நேரத்திற்கு நீர் அருந்துவதை தவிர்க்கவேண்டும்.

2 . பாகற்காய்:

பொதுவாக மாம்பழம் சாப்பிட பிறகு கசப்பான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். குறிப்பாக பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். அவ்வாறு சாப்பிடுவதால் குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

3 . தயிர்:

தயிர் கலந்து சாப்பிடும்போது உணவில் மாம்பழ துண்டுகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இவ்வாறு தயிருடன் மாம்பழத்தை கலந்து சாப்பிடுவதால் உடலில் வெப்பம், குளிர்ச்சி இரண்டும் ஒன்றாகி சரும பிரச்சனைகள் ஏற்பட்ட வாய்ப்பு அதிகம்.

4 . குளிர்பானம்:

மாம்பழம் சாப்பிட்டவுடன் குளிர்பானம் அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இதனை கட்டாயம் தவிர்க்கவேண்டும். மாம்பழம் மற்றும் குளிர்பானத்தில் உள்ள சர்க்கரை இரண்டும் சேர்ந்து, உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும்.