மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேகமாக முடி வளர இதை ட்ரை பண்ணுங்க..!
கருவேப்பிலை, கிராம்பு இந்த இரண்டு பொருட்களை மட்டும் வைத்து கொண்டு உங்கள் கூந்தலை கிடுகிடு என்று வளர செய்ய முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.?
ஆனால் நிச்சயம் முடியும். பொதுவாகவே கருவேப்பிலை சாப்பிட்டு வந்தால் முடி நன்கு கருகரு என்று வளரும் என்பார்கள். அதை தான் நாம் இங்கு பயன் படுத்த போகிறோம். மேலும் இதனுடன் கிராம்பையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
இதை செய்ய, முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும். பின் அதில் ஒரு கைப்பிடி அளவு (உங்கள் கூந்தலின் அளவுகேற்ப) எடுத்து பொட வேண்டும்.
பின் பத்து முதல் பன்னிரண்டு கிராம்பு துண்டுகளை அதில் சேர்த்து கொதிக்க விடவும்.
கருவேப்பிலை மற்றும் கிராம்பின் வாசனை நன்கு வெளிவரும். பின்னர் தண்ணீரின் நிறம் மாறும் அளவிற்கு கொதிக்க விட்டு இறக்கி ஆற விடவும்.
இந்த தண்ணீரை தலை முழுவதும் தடவி வந்தால், முடி வேகமாக வளர தொடங்கும். இதனை வாரத்தில் இரண்டு முறை செய்யலாம்.
தலையில் தடவிய பின் ஷாம்பூ போட்டு குளிக்க கூடாது. பின்பு பயன் அளிக்காமல் போய்விடும்.