என்னது!!! ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..?
பூண்டு சிறந்த மருந்துவ குணம் வாய்ந்த ஒரு பொருளாகும். பழங்காலம் தொட்டே மருத்துவ பயன்களுக்காகவும், ஆரோக்கிய நன்மைகளுக்காகவும், சுவைக்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது. பூண்டு ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பூண்டில் "அலிசின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்" உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. மேலும் கழலை, மரு போன்றவை நீக்குவதற்கும் பூண்டு உதவுகிறது.
இன்றைய வாழ்க்கை முறையில் நாம் உட்கொள்ளும் மோசமான உணவுகள், சரியான தூக்கமின்மை, நொறுக்கு தீணிகள் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கின்றன. சிலருக்கு இரத்த அழுத்தம் குறைவாகவும் அல்லது அதிகமாகவும் இருக்கும் பொழுது உணவு கட்டுப்பாட்டுடன் கூடிய மாத்திரைகள் அவசியமாகின்றன.
உணவின் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க நாம் தினமும் காலையில் ஒரு பல் பூண்டை மென்று தின்று வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் பூண்டில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை அதிகம் உள்ளது.
வெள்ளைப் பூண்டு ரத்த அழுத்தத்தை மட்டுமல்லாமல் மூட்டு வலி, வயிற்றில் உள்ள கிருமிகளை நீக்குதல், நல்ல கொழுப்பை பாதுகாத்தல், இருமல் சளியை சரி செய்தல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், மூளை செயல்பாட்டை அதிகரித்தல், ரத்த சர்க்கரை அளவை சமன்படுத்துதல் மற்றும் உடல் எடையை பாதுகாக்க உதவுகிறது. மேலும் உடல் சூடு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பூண்டை சேர்த்துக் கொள்ள வேண்டாம் அதற்கு பதிலாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.