கருப்பு திராட்சையில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!



Health benefits black grapes

கருப்பு திராட்சை ஒரு சத்து நிறைந்த அற்புத பழமாகும். இது பல்வேறு மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. அதன்படி கருப்பு திராட்சையில் ஆன்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

எனவே கருப்பு திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். கருப்பு திராட்சையில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இதய நோய் ஏற்படுவதை குறைக்கிறது. மேலும் இவை ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

Black Grapes

கருப்பு திராட்சையில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டுகள் கண் ஆரோக்கியத்திற்கு நல்ல பலன் அளிக்கிறது. மேலும் இவை கண்புரை மற்றும் மாலைக்கண் போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

அதேபோல் கருப்பு திராட்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இவை உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி தொற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

Black Grapes

கருப்பு திராட்சையில் உள்ள நார்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்க உதவுகிறது.