மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தினந்தோறும் பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
பூண்டு சமையலில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய உணவுப் பொருள். பூண்டு உணவுப் பொருளாக மட்டுமில்லாமல், ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவாகவும் பயன்படுகிறது. பூண்டில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல நன்மைகள் நிறைந்துள்ளது.
எனவே, தினந்தோறும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். பூண்டில் அல்லிசின் என்ற சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நோய்க்கு சக்தியை அதிகரித்து, சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
மேலும் இது இரத்த நாளங்களை விரிவு படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. அதேபோல் பூண்டு சாப்பிடுவதால் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.
பூண்டில் உள்ள அல்லிசின் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது. மேலும் இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
குறிப்பாக பூண்டு சாப்பிடுவதால் செரிமான சக்தியை அதிகரித்து, வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது. அதேபோல் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.
குறிப்பாக பாலூட்டும் தாய்மார்கள் பூண்டு சாப்பிடுவதால் குழந்தைக்கு தேவையான பால் கிடைக்க பூண்டு முக்கிய பங்கு வைக்கிறது. ஆனால், பாலூட்டும் தாய்மார்கள் பூண்டு சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அனுப்புவது நல்லது.