தினமும் இளநீர் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
தினமும் இளநீர் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைப்பதில் இளநீருக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இளநீரில் அதிக நன்மைகள் உள்ளன. இது இயற்கையான எலக்ட்ரோலைட் போல் செயல்படும். மேலும் இளநீரில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம் நமது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இளநீரில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளது. மேலும் இதில் உள்ள விக்னீசியம் டைப் 2 சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது. ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
அந்த வகையில் இளநீரில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பாக தொடர்ந்து இளநீர் குடிப்பதால் சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கிறது.
இளநீரில் உள்ள நீர் சத்துக்கள் நமது உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. மேலும், சருமத்திற்கு இளமையான தோற்றத்தை கொடுத்து முகப்பரு ஏற்படாமல் உள்ளது.