வாரத்திற்கு ஒரு முறை கம்மங்கூழ் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா.!?



Health benefits of drinking kamman kool

கோடைகாலம் தொடங்கி விட்டதால் உடல் சூட்டை தணிக்க நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் குளிர்ச்சியானதாக இருப்பது மிகவும் அவசியம். உடல் சூட்டை அதிகப்படுத்தும் உணவுகளை எடுத்துக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது உடலில் பல வகையான நோய்களை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

கூழ்

குறிப்பாக கோழி இறைச்சி, பலாப்பழம், மாம்பழம் போன்ற சூடு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக இளநீர், மோர், பழச்சாறு, கம்மங்கூழ் போன்றவற்றை எடுப்பது உடலுக்கு ஊட்டச்சத்தாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். குறிப்பாக கம்பு ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.

இந்த தானியத்தில் கூழ் செய்து மோர் கலந்து வாரத்திற்கு ஒருமுறை குடித்து வருவது உடலை குளிர்ச்சி படுத்துவதோடு, பலவிதமான நன்மைகளையும் உடலில் ஏற்படுத்துகிறது. மேலும் இது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும் என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலை உணவாக கம்மங்கூழ் குடித்து வரலாம்.

கூழ்

இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், கம்மங்கூழ் குடிப்பதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுப்படும். நீரிழிவு பிரச்சினை இருப்பவர்களுக்கு கம்பங்கூழ் ஒரு வரப் பிரசாதமாக இருந்து வருகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய கம்மங்கூழ் வாரத்திற்கு ஒரு முறையாவது கட்டாயமாக குடிப்பது நல்லது.