நோய்களை ஓட ஓட விரட்டும் மருத்துவ குணம் நிறைந்த அதிசய பூ.? எப்படி பயன்படுத்தலாம்.!?



Healthy benefits of eating neem flower

வேப்ப மரத்தின் பயன்கள்

தமிழ்நாட்டில் வளரும் மரங்கள் மற்றும் செடிகளில் பலவகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதில் குறிப்பாக வேப்பமரம் நம் உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்துகிறது. வேப்ப மரத்தில் உள்ள காய், பூ, இலை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவையாகவே இருந்து வருகிறது. இதில் வேப்பம்பூவில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன என்பதையும், எப்படி பயன்படுத்தலாம் என்பதை குறித்தும் இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

Neem flower

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் வேப்பமரம் கண்டிப்பாக இருக்கும். இந்த வேப்ப மரத்தில் உள்ள வேப்ப பூவின் மருத்துவ குணங்கள் தெரியாமல் பலரும் குப்பையில் தள்ளி விடுகின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் வேப்பம்பூவை வைத்து சமையலுக்கு பயன்படுத்தி நோயில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தினமும் காலையில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால், உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா.!?

Neem flower

வேப்பம்

பூவில் உள்ள நன்மைகள்

1. உடலில் கபம், பித்தம், வாந்தி போன்றவை அதிகமடைந்தால் வேப்பம்பூவை மென்று தின்று வந்தால் உடனே சரியாகும்.
2. உடலில் உள்ள கிருமிகளை அழித்து வெளியேற்றும் பண்பை கொண்டது வேப்பம்பூ என்பதால் இதனை கிருமி நாசினியாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
3. வேப்பம்பூவை சுத்தம் செய்து உப்பில் ஊற வைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொண்டால் வேப்பம்பூ வற்றலாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
4. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வேப்பம்பூவை ரசமாக வைத்து சாப்பிடுவதன் மூலம் ஜீரண சக்தி அதிகம் அடைந்து வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாவதோடு, மலச்சிக்களும் குணமடையும்.
5. கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
6. வாயு தொல்லைக்கு தேநீர் போட்டு குடித்து வரலாம். இவ்வாறு தலை முதல் கால்வரை பல நோய்களை குணப்படுத்தும் வேப்பம் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இதையும் படிங்க: தினமும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகளா.!?