உங்கள் குழந்தை இரவில் தூங்காமல் அழுகிறதா.? இந்த டிப்ஸை ஃபாலோ செய்யுங்கள்.!



How To calm crying sleepless babies at night

குழந்தைகள் தூங்குவது அவர்களது உடல் நலத்திற்கு நல்லது என்றாலும் பல குழந்தைகள் எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். இரவு நேரங்களில் கூட மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். சுறுசுறுப்பாக இருப்பது ஆரோக்கியம் தான் என்றாலும் குழந்தை ஓய்வு இல்லாமல் விளையாடிக் கொண்டே இருப்பது பெற்றோருக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும். 

குழந்தைகளை தூங்க வைக்க சில முயற்சிகளை நிபுணர்கள் கூறுகின்றனர். அது என்னவென்று இப்போது பார்க்கலாம். 

குழந்தைகள் தூங்குவது மிகவும் அவசியம்தான். அதற்காக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை வலுக்கட்டாயமாக தூங்க வைக்க முயற்சிப்பது தவறு. அதை விடுத்து, குழந்தையை மெதுவாக வருடுவது, மெல்லிய இசைகளை ஒளிக்க வைப்பது, கதை புத்தகங்களை படித்து காண்பிப்பது, இரவு நேரங்களில் இதமான நீரில் குளிக்க வைப்பது போன்றவை குழந்தைகளை தூக்கத்திற்கு ஊக்குவிக்கும். 

babies

உங்கள் வசதிக்கு ஏற்ப குழந்தைகளின் தூக்க நேரத்தை மாற்றக் கூடாது. அவர்களது தூக்க நேரம் என்பது ஒரே வழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இது குழந்தைகளின் மனநிலையை சம நிலையில் இருந்து நல்ல செய்வதால் அவர்கள் தூக்கத்தில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 

பகலில் நன்கு வெளிச்சம் இருக்கும் அறையில் குழந்தைகளை விளையாட விட வேண்டும். இரவு நேரத்தில் குழந்தைகள் இருக்கும் இடத்தை வெளிச்சம் குறைவாக வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் பசியில் அழும்போது அவர்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லாமல் அதே இடத்தில் வைத்து வெளிச்சம் குறைவான அறையில் உணவு ஊட்டினால் அவர்கள் அதிகபட்சமாக தூங்கி விடுவார்கள்.

babies

பலரும் குழந்தைகளின் மனநலம் மற்றும் அவர்களது அன்றாட பழக்க வழக்கங்கள் குறித்து கவனிப்பதும், மதிப்பதும் இல்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குழந்தைகளின் வழக்கங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் போவதற்கு இது முக்கிய காரணம். அவர்களது பழக்க வழக்கங்களை அன்றாடம் ஒரே மாதிரி பராமரிப்பது அவர்கள் விரைவில் அனைத்தையும் புரிந்து கொள்ளவும், அமைதியாக இருக்கவும் வழி வகை செய்யும்.

குழந்தைகள் தொல்லை தாங்க முடியாமல் பலரும் செல்போன், டிவிகளை வைத்து அவர்களை டைவர்ட் செய்கிறார்கள். உறங்க செல்வதற்கு முன்பு இதை செய்யக்கூடாது. மாறாக குழந்தைகளுடன் உரையாடுவது நல்லது. வேடிக்கையாக பேசி கதை சொல்வது போல நல்ல பழக்கங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கலாம்.