"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
தேங்காய் இல்லாமல் வெள்ளை நிறத்தில் சட்னி செய்வது எப்படி..?
தேங்காயே சேர்க்காமல் வெள்ளை நிறத்தில் சட்னி செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2
பொட்டுக்கடலை – 50 கிராம்
புளி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
பூண்டு - 3
உப்பு - தேவையான அளவு
தளிப்புக்கு:
எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 சிட்டிகை
கருவேப்பிலை - சிறிதளவு.
முதலில் அடுப்பை பற்ற வைத்து வாணலில் பொட்டுக்கடலையை தவிர மற்ற சாமான்களான பூண்டு, வெங்காயம், புளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிதமான தீயில் வதக்கி எடுத்து கொள்ளவும். பின் சூடு ஆறியதும் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். அதனையடுத்து தாளிப்பு பொருட்களை கொண்டு தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றவும். அவ்வளவு தான் சுவையான சட்னி தயார்.