மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அது ஒரு காலம்., அழகிய காலம்.. அனைவருக்கும் பிடித்த பொரி உருண்டை செய்வது எப்படி? ரெசிபி இதோ.!!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, எளிய முறையில் செய்யக்கூடிய பொரி உருண்டை வீட்டிலேயே எப்படி செய்வது என்று காணலாம்.
நாம் சிறுவயதில் இருந்தது முதல் இப்பொழுது வரை அனைத்து குழந்தைகளுக்கும் பொரி உருண்டை மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இதனை கடையில் வாங்கி உண்பதை விட வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து சாப்பிடுவது நல்லது.
தேவையான பொருட்கள் :
பொரி - 1 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
துருவிய கட்டி வெல்லம் - 1/4 கப்
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
★முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் மற்றும் துருவிய வெல்லம் சேர்த்து மிதமான சூட்டில் வெல்லம் கரையும் வரை விட வேண்டும்.
★பின் அதிலுள்ள தூசிகள் நீக்குவதற்கு வடிகட்டியை பயன்படுத்தி, வடிகட்டிய வெல்ல பாகை வடசட்டியில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும்.
★உருண்டை பதத்திற்கு வரும் வரை இடைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சில நிமிடங்களுக்கு பின் கெட்டியாகும் போது, ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் வைத்து பாகை ஊற்றி அது கரையாமல் இருந்து சிறு உருண்டைகளாக செய்ய முடிந்தால் அதுதான் உருண்டைப்பதம் ஆகும்.
★அடுத்து உருண்டை பதத்திற்கு வந்தவுடன் தாமதிக்காமல் அடுப்பை அணைத்து ஏலக்காய்தூள் மற்றும் பொரி சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
★கிளறிய பின் சற்று ஆறியதும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக கைகளை அழுத்தி உருண்டைகளை பிடித்தால் சுவையான பொரி உருண்டை தயாராகிவிடும்.
★பொரி உருண்டை பிடிக்கும் பொழுது நன்றாக அழுத்தி பிடித்தால் மட்டுமே மொறு மொறுவென இருக்கும்.