சூப்பரான சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை.. சிம்பிளாக செய்து அசத்துங்கள்.!
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் - 1/4 கப்
நெய் - 3 ஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
செய்முறை :
எடுத்து வைத்துள்ள அரிசி மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின் அந்த மாவில் பாதியை தனியாக எடுத்து வைத்து விடவும்.
மீதி இருக்கும் பாதி மாவில் 2 ஸ்பூன் சர்க்கரை துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அடுத்ததாக கடாயில் வெல்லத்தை போட்டு தண்ணீர் சிறிது ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
வெல்லம் நன்றாக கரைந்த பின் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர், மீண்டும் கடாயில் இருக்கும் பாகில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து கொதிக்க வைத்து 5 நிமிடத்திற்கு பின் வெந்ததும் எடுத்து வைத்துள்ள மீதமுள்ள அரிசி மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து அதை அப்படியே கொதிக்கும் வெல்லபாகில் ஊற்றி கிளற வேண்டும்.
இதில், சிறிது ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளலாம். மேலும், நெய்யையும் சேர்த்து 7 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்தால் கெட்டியான பதம் வரும். அப்போது, தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை ரெடி.