மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் கோதுமை தோசை.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!!
உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் கோதுமை இட்லி எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
கோதுமை மாவை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள நச்சுகள் வெளியேறி ரத்தம் சுத்தமாகும். மேலும் புற்றுநோயை தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை கோதுமையில் நிரம்பியிருக்கிறது.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி துருவல் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
துருவிய கேரட் - 1/4 கப்
நறுக்கிய கருவேப்பிலை - 1 கொத்து
நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு
கெட்டியான தயிர் - 1/2 கப்
சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு கப் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்து லேசான தீயில் வறுக்க வேண்டும்.
★பின் கோதுமை மாவை தனியாக எடுத்து வைத்துவிட்டு, அதே வாணலியில் சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலை பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
★அதனுடன் உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும். இவை பொன்னிறமாக வறுபடும்போது பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
★அடுத்து கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
★இறுதியாக ஆறிய கோதுமைமாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து தாளித்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
★இதனை இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால் கோதுமை இட்லி தயாராகிவிடும்.