96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா? இந்த உணவை ட்ரை பண்ணுங்க.!
நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் முக்கியமானவை என்றாலும் ஒரு சில உறுப்புகள் மிக முக்கியமானது. அந்த வகையில் நமது உடலில் உள்ள சிறுநீரகம் மிகவும் முக்கியமான உறுப்பு. இதன் மூலம் தான் நமது உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
அத்தகைய சிறுநீரகத்தை பலரும் கண்டு கொள்ளாமல் சிறுநீர் தொற்றுக்கு உள்ளாகின்றனர். எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
எலுமிச்சை சாரில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதேபோல் சிவப்பு திராட்சையில் வைட்டமின் பி6 மற்றும் ஏ உள்ளதால் இது சிறுநீரகத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
அதேபோல் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள சிவப்பு குடம் மிளகாய் சிறந்த உணவாக பயன்படுகிறது. மேலும் கொத்துமல்லி சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் பேரிச்சம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் நீங்கும். குறிப்பாக சிறுநீரகத்தை பாதுகாக்க நேரத்திற்கு தண்ணீர் குடித்தல் மற்றும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.