ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
நீங்கள் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் இட்லி, தோசை மாவை பயன்படுத்துபவர்களா... அப்படினா கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க...

அந்த காலத்தில் ஆட்டுகல்லில் மாவை அரைத்து பயன்படுத்தி வந்தார்கள். இதனால் எந்தவிதமான நோய் நொடி இன்றி இருந்தார்கள். ஆனால் நாகரீகம் என்ற பெயரில் கண்ட உணவு வகைகளை பணம் கொடுத்து வாங்கி சாப்பிட்டு நோய்களை நாமாகவே விலைக்கு வாங்கி கொள்கிறோம். நவீன மயமான இந்த உலகில் கிரைண்டரில் கூட மாவு அரைக்க சோம்பேறி பட்டு கடைகளில் மாவு வாங்குகிறோம்.
கடைகளில் விற்கப்படும் இட்லி மாவு நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க கால்சியம் சிலிகேட் என்கின்ற வேதிப் பொருளை மாவுடன் சேர்க்கின்றனர். இதனால் மாவு சீக்கிரம் கேட்டு போகாது. ஆனால் நமது உடலில் செரிமான கோளாறு ஏற்பட்டு உடல்நல கோளாறுகள் ஏற்படும்.
நாம் வீடுகளில் மாவு ஆட்டும் போது அரைப்பதற்கு முன்னும், பின்னும் கிரைண்டரை நன்கு கழுவி விடுவோம். ஆனால் சில மாவு அரைக்கும் நிறுவனங்கள் கிரைண்டரை சரியாக கழுவாமல் மாவு ஆட்டுவதால் மாவில் ஈகோலி என்னும் பாக்டீரியா தாக்கம் அடைந்து விடுகிறது. நாம் எவ்வளவு தான் இட்லி, தோசையை வேக வைத்தாலும் ஈகோலி பாக்டீரியா அழிவதில்லை.
இவ்வகையான ஈகோலி பாக்டீரியா தாக்கத்தினால் நாள்பட்ட வயிற்றுவலி, வாந்தி மயக்கம், இரைப்பை நோய், அஜீரண கோளாறு, வயிற்று போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே கடைகளில் மாவு வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே தூய்மையாக மாவு அரைத்து பயன்படுத்தி உடல்நலனை காத்து கொள்வோம்.