மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நார்ச்சத்து மிகுந்த கம்பு சாம்பார் சாதம் செய்வது எப்படி?..!
கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் இதில் கொழுப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும், அரிசியைக் காட்டிலும் கால்சியம், புரதம், இரும்பு மற்றும் உயிர்ச்சத்து என அனைத்தும் கொண்ட ஒரே தானியம் கம்பு தான். இத்தகைய சத்துக்கள் நிறைந்த கம்பு சாம்பார் சாதம் எவ்வாறு சமைப்பது என்பது பற்றி தற்போது காண்போம்.
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - அரை கப்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
புளி - நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கம்பு - ஒரு கப்
கருவேப்பிலை - சிறிதளவு
வறுத்த வேர்கடலை - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, சீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை :
★முதலில் புளியை நன்றாக ஊறவைத்து, கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
★ பின் குக்கரை அடுப்பில் வைத்து கம்பு, துவரம் பருப்பு சேர்த்து இவை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயத்தூள் போட்டு 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
★அடுத்து கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, கறிவேப்பிலை மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
★அதனுடன் உப்பு, தனியாத்தூள், மிளகாய் தூள் மற்றும் புளிக்கரைசல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். பின்னர் வேக வைத்த சாதத்துடன் இவற்றை சேர்த்து கிளறி பரிமாறினால் சுவையான கம்பு சாம்பார் சாதம் நிமிடங்களில் தயாராகிவிடும்.