தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சிறுநீரக கல் பிரச்சினை உள்ளதா? இந்த உணவை எல்லாம் ஒதுக்கி வச்சிடுங்க!
சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில குறிப்பிட்ட உணவுகளை தவிர்த்து வந்தால் அந்த பிரச்சினைகளில் இருந்து எளிதாக விடுபடலாம் என கூறப்படுகிறது. உடலில் தாதுக்கள் அதிகப்படியாக சேரும்போது சிறுநீரகத்தில் கல் படிந்து சிறுநீரக கற்களாக மாறுகிறது.
எனவே சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் வேர்க்கடலை போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேபோல் இனிப்பான பண்டங்கள் கிழங்கு வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் புரத சக்தி அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். அதன்படி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, முட்டை மற்றும் மீன் ஆகியவற்றை சாப்பிடவே கூடாது. அதேபோல் தக்காளியில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் சிறுநீரக கல் பிரச்சனையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் அதிக அளவு தண்ணீர் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீர் கழிக்கும் போது கற்கள் அதன் வழியாக வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.