பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
முதல் முறையாக வெளியான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் புது வீட்டின் புகைப்படங்கள்! அடேங்கப்பா!
தமிழகத்தில் பிரபலமான ஜவுளிக்கடைகளில் ஓன்று சரவணா ஸ்டோர்ஸ். சென்னை மட்டும் இல்லாது இந்தியா முழுவதும் பிரபலமான கடைகளில் இதுவும் ஓன்று. நெல்லை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு டீ விற்க வந்த மூன்று சகோதர்களின் உழைப்புதான் இந்த பிரமாண்ட சரவணா ஸ்டோர்ஸ்.
சென்னை டி நகரில் மட்டுமே இருந்துவந்த சரவணா ஸ்டோர்ஸ் தற்போது குரோம்பேட்டை, போரூர், பாடி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் என சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகள் அனைத்திலும் விரிவடைந்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் வளர்ச்சியும், புகழும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது.
தனது கடையின் விளம்பரத்திற்கு தானே நடித்து, அதன்மூலம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்திருந்தாலும் இன்றுவரை கம்பீரமாக தனது கடை விளம்பரத்தில் நடித்துவருகிறார் லெஜெண்ட் சரவணன் அருள்.
இந்நிலையில் தனது சொந்த ஊரான திருநெல்வேலி புறநகர் பகுதியில் பிரம்மாண்டமாய் வீடு ஒன்றை கட்டி கிரஹப்பிரவேசம் செய்துள்ளார். ’லெஜெண்ட் சரவணன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வீட்டை பார்ப்பதற்கே மிகவும் பிரமாண்டமாய் உள்ளது.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கும் வகையில் மூன்றடுக்கு மாளிகையில் சமையல் அறையே ஆயிரம் கன சதுரடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டை பார்த்து உள்ளூர்வாசிகள் வாயடைத்துப்போய் கிடக்கிறார்கள். சென்னையில் வசிக்கும் அருள், எப்போதாவது தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றால் இங்கு ஓரிரு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க இந்த ‘சின்ன வீட்டை’ பிரம்மாண்டமாய் கட்டியுள்ளார்.