இது மாம்பழ சீசன்: சுவை மட்டுமல்ல ஏராளமான நன்மைகளை தரும் மாங்கனிய பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க..!



Mango is the most flavorful fruit in the world

முக்கனிகளில் அதிக சுவை உடைய கனி மாங்கனி. இது கோடை காலங்களில் விளையக்கூடியது. பெரியவரிலிருந்து சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் கனி மாங்கனியாகும். இதன் சுவைக்கு அடிமையாகாதவர் யாரும் இருக்க முடியாது.

மாம்பழம் அதிக நார்ச்சத்து கொண்ட பழம் எனவே செரிமான செயல்பாட்டுக்கு உதவி புரியும். மேலும் உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரித்து எடை குறைவதற்கும் வழிவகை செய்யும்.

மாம்பழத்தில் வைட்டமின்-சி சத்து, பெக்டின், நார்ச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன. இவை உடலில் கொழுப்பு அளவை குறைக்கும் தன்மை கொண்டவை.

மாம்பழத்தில் வைட்டமின்-சி மட்டுமின்றி வைட்டமின்-ஏ சத்தும், 25 வகையான கரோட்டினாய்டுகளும் உள்ளடங்கி இருக்கிறது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

வைட்டமின் ஏ கண்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது என்பதால் கண் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

மாம்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ரத்தசோகை பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு இயற்கையாகவே தீர்வு வழங்கக்கூடியது. ஆதலால் இரும்புச்சத்து குறைபாடு கொண்ட பெண்கள் அவசியம் மாம்பழம் சாப்பிட வேண்டும்.

பொதுவாக 100 கிராம் மாம்பழத்தில் நீர்ச்சத்து, 76 கிராம் நார்ச்சத்து, 0.6 கிராம் தாதுப்பொருட்கள், 0.4 கிராம் கொழுப்பு, 0.4 கிராம் புரதம், 0.5 கிராம் மாவுப் பொருள், 17 கிராம் சுண்ணாம்புச் சத்து, 13 மில்லி கிராம் இரும்புச்சத்து, 1.2 மில்லி கிராம் கரோட்டின், 72 கலோரி தையமின், 0.8 மில்லி கிராம் நியாசின், 0.8 மில்லி கிராம் ரிபோஃபிளேவின், 0.08 மில்லி கிராம் விட்டமின் சி ஆகியவை இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனவே சுவையேடு நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறம்பிய மாம்பழத்தை கிடைக்கும் போது தவறவிடாதீர்கள்.