ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
மன அழுத்தம் உள்ளதா.!? 2 நிமிடத்தில் காணாமல் போக, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!

இந்த காலத்தில் மன அழுத்தம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கிறது. சிலர் அதிகம் டென்ஷன் எடுத்துக் கொள்வதால் பதட்டம் அடைந்து மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். சிலருக்கு வேலை பார்க்கும் அலுவலகத்திலும், சிலருக்கு வீட்டின் பிரச்சனைகளாலும் மன அழுத்தம் உண்டாகும். இதனால் என்ன முடிவு செய்வது என்பது பற்றிய கவலையும் ஒரு விதமான பதட்டமும் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். இந்த மன அழுத்தத்தில் இரண்டு இரண்டே நிமிடத்தில் விடுபட சில ஹேக் உள்ளன. அதைப் பற்றி பார்ப்போம்.
மன அழுத்தம் உள்ளவர்கள் தியானம், யோகா மற்றும் இயற்கையில் சிறிது நேரம் செலவிடுவது அதன் மூலம் சரி செய்யலாம். பதட்டம் ஏற்படும்போது அமைதியைக் கையாளுவது நல்ல பலனைத் தரும். மேலும் வாயின் உட்புறத்தில் மேல் பகுதியில் உங்கள் நாக்கால் தட்டுவதன் மூலம் அமைதி ஏற்பட்டு மன அழுத்தத்தில் இருந்து விரைவில் விடுபடலாம். இதற்கு டங் டேப்பிங் நுட்பம் என்று பெயர்.
நரம்பு மண்டலத்தின் முக்கியமான நரம்பு இந்த வேகஸ் நரம்பு. இது செரிமானப் பகுதிகள் மற்றும் ஓய்வு விளைவுகளுக்கு காரணமாக உள்ளது. நாக்கால் வாயின் உட்புறத்தில் தட்டுவதன் மூலம் இந்த வேகஸ் நரம்பு ஆக்டிவேட் செய்யப்பட்டு மன அழுத்தத்தில் இருந்து விரைவில் விடுபடச் செய்கிறது.
இதுபோல் நாக்கை தட்டும் பொழுது புதிய நரம்பு இணைப்புகள் உருவாகி, உடம்பில் மிருதுவாக்கத்தை வலிமைப்படுத்தி, உணர்ச்சிகளை ஒழுங்கு படுத்துகிறது. இதனால் மன அழுத்தம் விரைவில் நீங்குகிறது. மன உடல் தொடர்புக்கு முக்கியமான ஒன்று நாக்கை தட்டுவது தான். இதன் மூலம் பதட்டம் உள்ளவர்களுக்கு ஒரு வித அமைதி உணர்வு தோன்றும்.
ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி இணைப்பிரிவு நரம்பு மண்டலத்தை ஆக்டிவேட் செய்து மன அழுத்தத்தில் இருந்து விரைவில் விடுபட உதவுகிறது. இதேபோல் தியானமும் மன அழுத்தத்திலிருந்து வெளிவர முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி செய்யும் பொழுது மனநிலையை அமைதிப்படுத்தி பதட்டம் நீங்கி, மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.