வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.!
காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பது நல்லதா? கெட்டதா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
பொதுவாக காலையில் எழுந்தவுடன் பலருக்கும் டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பது உடலுக்கு பல்வேறு வகையான தீங்குகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அதற்கு காரணம் டீ மற்றும் காபியில் காஃபின் உள்ளது. இது வயிற்று அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக வயிற்றில் எரிச்சல், நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக காஃபின் சிறுநீரை அதிகரிக்க கூடும் என்பதால் நீரிழிப்பு ஏற்படலாம்.
மேலும், வெறும் வயிற்றில் டீ மற்றும் காபி குடிப்பதால் ஒற்றை தலைவலி, தூக்கமின்மை, பதட்டம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம். எனவே காலையில் வெறும் வயிற்றில் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
அதிலும் குறிப்பாக வயிற்றுப்புண் உள்ளவர்கள், இரைப்பை அழற்சி நோய் உள்ளவர்கள், பதட்டம் அல்லது மன அழுத்தம் உள்ளவர்கள், தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்த பிறகு அல்லது காலை உணவுடன் அல்லது காலை உணவு சாப்பிட்ட பிறகு டீ மற்றும் காபி குடித்தால் இந்த பிரச்சினைகள் ஏற்பட குறைவு என கூறப்படுகிறது.