"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
இயற்கையாக முக அழகை அதிகரிப்பது எப்படி?... ரோஜா, மல்லி, ஆவாரம்பூ ஃபேஸ் பேக்..!
மலர்களைப் போல மென்மையாகவும், மிருதுவாகவும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் இல்லாமல் பார்ப்பதற்கு பளிச்சென தோற்றமளிக்கும் அழகிற்காக, பெண்களுக்கு பிடித்த ஃபேஸ் பேக் பற்றி தற்போது இப்பதிவில் காணலாம்.
ரோஜா பூ ஃபேஸ் பேக்:
தேவையானவை:
பால் - 1 தேக்கரண்டி
கோதுமைத் தவிடு - 1 தேக்கரண்டி
ரோஜா பூ இதழ் - ஒரு கைப்பிடி
செய்முறை :
முதலில் முகம் மிருதுவாக இருப்பதற்காக ரோஜாப்பூவின் இதழை எடுத்து அரைக்கவேண்டும். பின் அதனுடன் பால் மற்றும் கோதுமை தவிடு ஆகியவற்றை கலந்து நன்றாக அரைக்கவும். அரைத்தபின் அந்த கலவையை முகத்தில் பூசி கைகளால் இடது புறத்தில் இருந்து வலது புறமும், வலது புறத்திலிருந்து இடது புறமும் மசாஜ் செய்யவும். இதன் பின்னர் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்கும்.
மல்லிகை பூ ஃபேஸ் பேக்:
தேவையானவை:
கெட்டியான தயிர் - 1 4 கப்
மல்லிகைப்பூவின் இதழ்கள் - 1/4 கப்
செய்முறை :
மல்லிகை பூ மற்றும் தயிர் இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் நேரடியாக மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசவேண்டும். பின் 20 நிமிடங்களுக்குப் பிறகு நீரால் கழுவினால் அடையாளம் தெரியாத அளவிற்கு உங்கள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் உணரலாம். வறண்ட சருமம் உடையவர்களுக்கும் இந்த ஃபேஸ் பேக் மிக சிறந்த முறையில் உதவும்.
ஆவாரம் பூ ஃபேஸ் பேக்:
தேவையானவை:
ரோஜா பன்னீர் - தேவைக்கேற்ப
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
ஆவாரம் பூ - 1 கைப்பிடி
செய்முறை :
வெளியே செல்லும்போது வெயிலின் தாக்கத்தால் கருமை அடையும் சருமத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக ஆவாரம்பூ உதவுகிறது. அரிசி மாவு, மஞ்சள் தூள், ஆவாரம் பூ மற்றும் ரோஜா பன்னீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பசை போல அரைக்க வேண்டும். பின் இதனை முகத்திலும், கழுத்திலும் தடவி 15 நிமிடங்களுக்கு பின் மென்மையாக மசாஜ் செய்தால் உங்களின் சருமம் நிறம் மாறுவதை நீங்கள் உணர்வீர்கள். வாரத்திற்கு ஒரு தடவை இதனை செய்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.
செம்பருத்தி பூ ஃபேஸ் பேக்:
தேவையானவை:
தயிர் - 1 தேக்கரண்டி
செம்பருத்தி பூ - ஒன்று
ரோஜா பூ - ஒன்று
முல்தானி மெட்டி - தேக்கரண்டி
செய்முறை :
ரோஜா இதழ் மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின் அதனுடன் தயிர் மற்றும் முல்தானி மெட்டி ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவியபின், 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் மென்மையாகவும், அழுக்குகள் நீங்கி பளிச்சென்றும், கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஆகியன மறைந்தும் இருக்கும்.
செம்பருத்தி பூ ஃபேஸ் பேக்:
தேவையானவை:
தயிர் - 1 தேக்கரண்டி
செம்பருத்தி பூ - ஒன்று
ரோஜா பூ - ஒன்று
முல்தானி மெட்டி - 1தேக்கரண்டி
செய்முறை :
ரோஜா இதழ் மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின் அதனுடன் தயிர் மற்றும் முல்தானி மெட்டி ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவியபின், 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் மென்மையாகவும், அழுக்குகள் நீங்கி கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஆகியன மறைந்தும் இருக்கும்.