மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முழு தவளையையும் அப்படியே விழுங்கிய சிலந்தி... வைரலாகும் வீடியோ.!
சிலந்தி ஒன்று முழு தவளையையும் அப்படியே விழுங்கிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி பகுதியை சேர்ந்தவர் சுஜய் ஷா. இவர் சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் கழிவறையில் வித்தியாசமான காட்சி ஒன்றை பார்த்துள்ளார். அதாவது சிலந்தி ஒன்று முழு தவளையை அப்படியே விழுங்கிய அரிய காட்சி.
அந்த அரிய காட்சியை வீடியோவாக எடுத்து சுஜய் ஷா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த இணையவாசிகள் பொதுவாக தவளை தான் பூச்சி போன்றவற்றை உணவாக உட்கொள்ளும். ஆனால் இங்கு ஒரு சிலந்தி முழு தவளையையும் அப்படி விழுங்குகிறதே என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.
ஆனால் அது எந்த வகை சிலந்தி என்று தெரியாமல் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த சுஜய் ஷாவுக்கு வல்லுநர்கள் சிலர் அந்த சிலந்தியின் வகை குறித்து தெரிவித்துள்ளனர். அதாவது, இந்த சிலந்தியின் பெயர் ஹண்ட்ஸ்மேன் ஸ்பைடர் எனவும் இந்த வகை சிலந்திகள் அளவில் சிறிய தவளை, பறவைகள், பல்லி, பாம்பு உள்ளிட்டவற்றை சாப்பிடும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வகை சிலந்திகள் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் காணப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.