மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமா.. இந்த ஒரு பழம் போதும்.?
உடல் எடைக் குறைப்பு என்பது இன்று பலருக்கும் ஒரு குறிக்கோளாகவே மாறிவிட்டது. நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் மாற்றம் கொண்டுவராமல், ஆரோக்கியமான உடல் எடைக்குறைப்பு சாத்தியமே இல்லை.
பப்பாளி மூலம் எளிதான முறையில் உடல் எடையை குறைக்கும் வழியை நாம் இங்கு பார்ப்போம். நார்ச்சத்து நிறைந்த பப்பாளி கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட பப்பாளியை தினமும் காலையில் துண்டுகளாக நறுக்கி, கருப்பு உப்பு மற்றும் மிளகு சேர்த்து சாப்பிடலாம்.
பப்பாளி பழச்சாறு செய்து குடிப்பதும் உடல் ஆரோக்யத்தைப் பேண உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் உடல் கொழுப்பைக் குறைத்து, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. மிகக்குறைந்த கலோரியைக் கொண்டுள்ள பப்பாளியில், பலவித ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
மிக்ஸியில் ஒரு க்ளாஸ் பாலுடன் பப்பாளி துண்டுகள் மற்றும் சில உலர்பழங்களை சேர்த்து அரைத்து காலையில் குடிப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காது. மேலும் ஒரு கப் தயிருடன் பப்பாளித் துண்டுகள் மற்றும் உலர் பழங்களைக் கலந்து உட்கொள்வதும் உடல் எடையை வேகமாகக் குறைக்கும்.