மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எச்சரிக்கை.! சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் உணவுகள் எது தெரியுமா.!?
சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி
ஆரோக்கியமாக இருப்பதற்கும் நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் நாம் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் நம் உடலில் சிறுநீரகத்தின் வேலை மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. உடல் மற்றும் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்து வரும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பது மிகவும் அவசியம்.
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நம் உணவு பழக்க வழக்கங்களும், அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும் நம் உடலை மிகவும் பாதிக்கிறது. குறிப்பாக நாம் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளினால் சிறுநீரகம் மிகவும் பாதிப்படைகிறது. இதில் குறிப்பாக ஒரு சில உணவுகள் சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் தன்மையை கொண்டுள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இதைப்பற்றி இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
இதையும் படிங்க: காலையில் பள்ளி குழந்தைகளுக்கு ராகி மாவில் இந்த டிபன் செய்து கொடுத்து பாருங்க.!?
சிறுநீரகத்தை
செயலிழக்க வைக்கும் உணவு பொருட்கள்1. பதப்படுத்தப்பட்ட உணவுகள் - அதிக சோடியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளான மாமிசம், கேன்களில் அடைக்கப்பட்ட சூப்கள், நூடுல்ஸ், ஸ்னாக்ஸ் போன்றவை சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கிறது.
2. குளிர்பானங்கள் - பிரக்டோஸ் மற்றும் பாஸ்போரிக் அமிலம் நிறைந்த ஜூஸ்கள், எனர்ஜி பானங்கள், செறிவூட்டப்பட்ட பானங்கள் போன்றவற்றை அடிக்கடி குடிக்கும்போது சிறுநீரகத்தின் செயல் இழக்கும் அபாயம் ஏற்படும்.
3.
சிவப்பு இறைச்சி - மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டு இறைச்சி போன்றவை அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் ஊறுகாய் உப்பில் வறுக்கப்பட்ட நட்ஸ், கடலைகள், உப்பில் ஊற வைக்கபட்ட ஆலிவ்கள் போன்ற சோடியம் நிறைந்த உணவுகள், காபின் அதிகம் கலக்கப்பட்ட காபி மற்றும் சாக்லேட் பொருட்கள், செயற்கை இனிப்புகள், அதிகம் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.
இதையும் படிங்க: நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் பீர்க்கங்காய்.! வேறு என்னென்ன நன்மைகள் உள்ளது தெரியுமா.!?