8 வருஷ உழைப்பு.. ஒரு போன் கால்; மொத்த பணமும் காலி.! கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் போட்டியாளர்!
குட்டீஸ் விரும்பும் ரவா லட்டு; இல்லத்தரசிகளே இன்றே சுவைபட செய்து அசத்துங்கள்.!!
கோடை விடுமுறை முடிவுக்கு வந்து விரைவில் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவுள்ளனர். இதற்கு முன்னதாக அவர்களுக்கு சாப்பிட பல இனிப்பு மற்றும் காரங்களை வாங்கி நாம் கொடுத்திருப்போம். ஒரு மாறுதலுக்கு சுவையான ரவா லட்டு வீட்டிலேயே செய்வது எப்படி என தெரிந்துகொண்டு, அதனை உங்களின் கைப்பட செய்து கொடுத்து அசத்துங்கள். இந்த ரவா லட்டு பலரின் இளமைகாலத்தையும் நினைவுபடுத்தும் தன்மை கொண்டது.
செய்யத் தேவையான பொருட்கள்
ரவை - 200 கிராம்,
சர்க்கரை - அரை கப்,
நெய் - 50 மில்லி,
முந்திரி - 5,
ஏலக்காய் - 2.
செய்முறை
முதலில் எடுத்துகொண்ட ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனை லேசான கொரகொரப்புடன் அரைத்து எடுத்துக்கொள்ளவும். விருப்பம் இருப்பின் அப்படியேவும் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் மசாலா தோசை வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி.?
இதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்த பொருட்களை பாத்திரத்தில் சேர்த்து சிறிதளவு நெய் ஊற்றி கிளற வேண்டும். பின் வெந்நீர் ஊற்றி சிறிது சிறிதாக பிசைந்து. முந்திரி சேர்த்து லட்டு பதத்திற்கு உருட்டி எடுக்க வேண்டும்.
சர்க்கரை முதலிலேயே சேர்த்து அரைக்காமல், அதனை பாகு போல காய்ச்சி சேர்த்தும் ரவா லட்டு தயாரிக்கலாம்.
இதையும் படிங்க: கோதுமை மாவில் சுவையான பஞ்சு போல இட்லி இப்படி செய்து பாருங்க.? குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.!?