குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான உருளைக்கிழங்கு சீஸ் ஆம்லெட் எப்படி செய்யலாம்?



Recipes for potato cheese omelet

பொதுவாக கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடுவதற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள். குறிப்பாக குழந்தைகள் கோடைகாலத்தில் அதிக வெயிலின் காரணமாக எதை கொடுத்தாலும் சாப்பிட அடம் பிடிப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உருளைகிழங்கு சீஸ் ஆம்லெட் இப்படி செய்து கொடுத்து பாருங்க. சுவை வேற லெவலில் இருக்கும்.

Healthy

உருளைக்கிழங்கு சீஸ் ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 2
முட்டை - 2
எண்ணெய் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தக்காளி சாஸ் - சிறிது
சீஸ் - சிறிது
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

இதையும் படிங்க: "இயற்கையின் மிகச்சிறந்த வரப்பிரசாதம் மண்பானை தண்ணீர்" மண்பானையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!?

செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி நன்றாக கழுவி விட்டு சிறிது சிறிதாக துருவி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி துருவி வைத்த உருளைக்கிழங்கு சிறிது மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக வேகும் அளவிற்கு வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து துருவி வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

Healthy

பின்பு தோசை கல் அல்லது தவாவில் வெண்ணெய் சேர்த்து கலக்கி வைத்த முட்டைகளை ஊற்றி ஆம்லெட் போல செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதில் இறுதியாக சீஸ் சேர்த்து உருகும் நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும். இந்த சுவையான மற்றும் ஹெல்தியான  உருளைக்கிழங்கு சீஸ் ஆம்லெட் குழந்தைகளுக்கு தினமும் சாப்பிட கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்ணுவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதையும் படிங்க: உலர் திராட்சையை ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா.!?