திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறீர்களா? பணவரவு பெருக!!
பணம் சம்பாதிக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு சென்றாலே பணப்பிரச்சனை. வீட்டு செலவு, குழந்தைகள் படிப்பு செலவு, லோன், வாகன செலவு என செலவுகள் மாறி மாறி வருவதால் மன அமைதி இல்லாமல் இருக்கிறேன்.
நிம்மதியான வாழ்க்கையை எப்போது தான் வாழப் போகிறேனோ என தினமும் அலுத்து கொள்வதுதான் மிச்சம். உங்களின் கஷ்டங்கள் தீர குறைவான வருமானமாக இருந்தாலும் மனநிம்மதியுடன் குடும்பத்தில் ஆரோக்கியமாகவும், மனநிம்மதியுடன் வாழ தினமும் லட்சுமி குபேர விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.
தடைபட்டு வரும் தனவரவு தாராளமாக கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிரம்பி வழியும். தொழில்/வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
லட்சுமி குபேர விளக்கில் எண்ணெய் ஊற்றி குபேர நாணயத்தை போட்டு, அதன்மேல் ஏலக்காய் விதைகளை தூவி திரி போட்டு வைத்து கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு பன்னீர் கலந்து வாசனை மிகுந்த பூக்களை தூவி விட வேண்டும்.
பின்பு மகாலட்சுமியையும், குபேரரையும் மனதார நினைத்து லட்சுமி குபேர விளக்கை காலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் ஏற்றிவிட வேண்டும்.
லட்சுமி குபேர விளக்கை தினமும் ஏற்றுவது நல்ல பலனை தரும். முடியாதவர்கள் குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை, லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை மற்றும் முக்கிய விரத தினங்கள் மற்றும் விஷேச தினங்களில் ஏற்றுவது சிறப்பு.
லட்சுமி குபேர விளக்கு ஏற்றுவதால் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன தைரியம் பிறக்கும் என்பது ஐதீகம்.