எண்ணற்ற பலன்களை அள்ளித்தரும் சீத்தாபழம்: இதை ஒரு தடவை சுவைத்து பாருங்க, அப்புறம் எங்க பாத்தாலும் விடமாட்டீங்க..!



Sugar-apple is native to the United States and the West Indies

சீத்தாப்பழம் அல்லது சீதாப்பழம் (Sugar-apple) என்பது அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளை தாயகமாக கொண்டது. எசுபானிய வணிகர்களால் இது ஆசியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

உணவு உட்கொண்ட பிறகு இனிப்பு பண்டம் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? உடல் எடை கூடி விடும், கொழுப்புச் சத்து கூடிவிடும், சர்க்கரை ஏறி விடும் என்ற பயம் இனிப்பு சாப்பிட விடாமல் உங்களைத் தடுக்கிறதா?

இனிமேல் கவலையை விடுங்கள், இனிப்பு பண்டங்களுக்கு பதில் ஒரு சீத்தாப்பழம் சாப்பிடுங்கள். இனிப்பு சுவையும் கிடைக்கும், நார்ச்சத்து மிகுந்திருப்பதால் சர்க்கரை அளவும் கூடாது, உடல் நலத்தை பாதுகாக்கும் சத்துக்களும் இந்த பழத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கும்.

சீத்தாப்பழத்தில் வைட்டமின்-சி, வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின்-ஏ, நார்ச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்தது. புரதம், தாது பொருள்கள், இனிப்பு, கொழுப்புசத்து நிறைந்தது. இதில் இருக்கும் தாதுப்பொருள்கள் நம் உடலில் இருக்கும் எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இதயத்துக்கும் வலு கொடுக்கும்.

சீத்தாப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ரத்த நாளங்களின் விரிவடைய உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது.

சீத்தாப்பழம் அதிக ஊட்டச்சத்துக்கள், மிகச்சரியான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களால் நிரம்பியுள்ளது. இதனுடன் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.

மேலும் இந்த பழத்தில் வைட்டமின்-பி6 நிறைந்துள்ளது. இது மூச்சுக்குழாய் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. ஆஸ்துமாவை தடுக்க உதவுகிறது. நுரையீரல் தொடர்பான சிக்கல் இருப்பவர்களுக்கு சீத்தாப்பழம் நன்மை தரும். வைட்டமின்-சி உள்ளதால் இது சளியை போக்கிவிடும்.

ஆஸ்துமா மற்றும் காசநோய் உள்ளவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.