ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சூப்பர் டிப்ஸ்.. இந்த ரசம் குடிச்சு பாருங்க தீராத நெஞ்சு சளியும் உடனே கரைந்து வெளியேறி விடும்..!
மழைக்காலத்தில் பல்வேறு வைரஸ் தொற்றால் ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை அலச்சியமாக விடும்போது சளி ஆனது நெஞ்சில் சேர்ந்துவிடும். இதனை குணப்படுத்த பல்வேறு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் நிரந்தர தீர்வை காண்பது கடினமாக தான் உள்ளது. இதற்கு ஒரு சிறந்த தீர்வு மற்றும் அதன் செய்முறையை காண்போம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் புளியை 15 நிமிடங்கள் ஊறவைத்து அதன் பின் புளி கரைசலை வடிகட்டி எடுத்து அதனோடு ஒரு தக்காளியை பிழிந்து வைத்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து எண்ணை சேர்க்காமல் அதில் வரமிளகாய், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
பின்னர் வறுத்து வைத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதோடு தூதுவளை இலைகளை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அதனையடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது சூடேறியதும் மிக்சியில் அரைத்து வைத்திருந்த விழுது, பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பிறகு ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள புளி, தக்காளி கரைசலை இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். பின்னர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இதில் வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து கொள்ளவும். அதன் பின் இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சூடாக இருக்கும் பொழுது ஸ்பூன் பயன்படுத்தி பருகவும். இந்த ரசத்தை ஒரு முறை குடித்தால் போதும் மார்பில் தேங்கி இருக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.