கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
இந்த நோய் இருப்பவர்கள் எலுமிச்சை பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.? மருத்துவர்கள் எச்சரிக்கை.!?
பொதுவாக உலக அளவில் அதிகமாக எடுத்துக் கொள்ளும் பழ வகைகளில் எலுமிச்சையும் ஒன்று. அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் சிட்ரஸ் பல வகைகளில் ஒன்றான எலுமிச்சையில் ஊட்டச்சத்து, சுவை, மருத்துவ குணங்கள் என பல உள்ளன. இவ்வாறு பல வகையான நன்மைகள் எலுமிச்சையில் இருந்தாலும் ஒரு சில நோயுடையவர்களுக்கு எலுமிச்சை பழம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். எலுமிச்சை பழத்தை யார் யார் உபயோகிக்க கூடாது என்பதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
1
. செரிமான பிரச்சனை உள்ளவர்கள்
எலுமிச்சையில் அளவுக்கு அதிகமான அமிலங்கள் நிறைந்திருப்பதால் வயிற்றில் அமில பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் குடல் புண்கள், அல்சர் போன்ற நோய் இருப்பவர்கள் எலுமிச்சையை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக நெஞ்செரிச்சல், வயிற்று வலி, செரிமான பிரச்சனை போன்றவை இருக்கும்போது எலுமிச்சையை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இதையும் படிங்க: Mango recipe: 5 நிமிடத்தில் எளிதாக செய்யக்கூடிய மாங்காய் பச்சடி ட்ரை பண்ணி பாருங்க.!?
2.
பல் சொத்தை மற்றும் வாயில் புண்கள் -பல் சொத்தை, ஈறுகள் வீக்கம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் எலுமிச்சை சாறு கண்டிப்பாக குடிக்க கூடாது. இதை அடிக்கடி குடிக்கும் போது பற்களின் ஈறுகள் மேலும் வீக்கம் அடைந்து பற்கள் பலவீனப்படும்.
3. சிட்ரஸ் அலர்ஜி - ஒரு சிலருக்கு சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை சாப்பிடும் போது உடலில் அலர்ஜி, மூச்சு விட சிரமம், தொண்டையில் புண்கள் போன்றவை ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் சிட்ரஸ் பழங்களை தவிர்ப்பது நல்லது.
4. மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் -
ஒரு சில நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது எலுமிச்சை பழத்தை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. இது கல்லீரலில் பிரச்சினையை ஏற்படுத்தும்.
5
. சிறுநீரக கற்கள் - சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் அல்லது சிறுநீரக நோயாளிகள் எலுமிச்சை பழத்தை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது இதில் ஆக்சலேட்டுகள் அதிகமாக இருப்பதால் நோய் பாதிப்பினை மேலும் தீவிரப்படுத்தும்.
இதையும் படிங்க: "கால் ஆட்டினால் குடும்பத்திற்கு ஆகாது" முன்னோர்கள் கூறியதன் காரணம் என்ன தெரியுமா.!?