"கால் ஆட்டினால் குடும்பத்திற்கு ஆகாது" முன்னோர்கள் கூறியதன் காரணம் என்ன தெரியுமா.!?



What is the reason for dont shake the foot

கால்களை ஆட்டும் பழக்கம் 

நம்மில் பலருக்கும் அமர்ந்திருக்கும் போது கால்களை ஆட்டும் பழக்கம் இருக்கும். அமர்ந்து வேலை பார்க்கும் போது அல்லது மொபைல் பார்த்துக் கொண்டிருக்கும்போது கால்களை ஆட்டுவதை சிலர் வழக்கம வைத்திருப்பார்கள். இவ்வாறு கால்களை ஆட்டும் பழக்கம் குடும்பத்திற்கு நல்லதல்ல என்று முன்னோர்கள் மற்றும் நம் வீட்டு பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம்.

Healthy

குறிப்பாக பெண்கள் அமர்ந்து கால் ஆட்டும்போது பெண்பிள்ளை இப்படி கால் ஆட்டக்கூடாது, குடும்பத்திற்கு ஆகாது என்று வீட்டில் உள்ள அம்மா அல்லது பாட்டி திட்டுவதை பார்த்திருப்பீர்கள். ஏன் கால் ஆட்ட கூடாது என்று கேள்வி கேட்டால் பெரியவர்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்று தான் கூறுவார்கள். ஆனால் இதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: தினமும் நடைப்பயிற்சி செய்யும் நபரா நீங்கள்.? இந்த தவறுகளை மறந்தும் கூட செய்யாதீங்க.!?

கால்

ஆட்டுவது ஒரு நோயா?

ஆண்களோ பெண்களோ இவ்வாறு தொடர்ந்து கால்களை ஆட்டுவதை ஆங்கிலத்தில் RESTLESS LEG SYNDROME என்று கூறுவார்கள். இவ்வாறு கால்களை ஆட்டும் நோய் இருப்பதால் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. நம் உடலின் எடையை முழுவதுமாக சுமக்கும் உறுப்பு என்றால் அது கால் தான். எனவே கால்களை தொடர்ந்து ஆட்டிக்கொண்டே இருக்கும்போது மூட்டு பகுதிக்கு செல்லும் நரம்பு பாதிப்படைகிறது. இதனால் மூட்டு பகுதி தேய்மானம், சவ்வு கிழிவது, மூட்டி எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

Healthy

பெண்கள் கால்களை ஆட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள்

இவ்வாறு கால்களை ஆட்டும் பழக்கம் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பையில் பாதிப்பு ஏற்படுவதாக பல்கலைக்கழக ஆய்வின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. மேலும் இளைஞர்களின் மனநிலையை பாதிப்பதோடு, தூக்கமின்மை, மனச்சிதைவு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது என்பதால் இப்பழக்கத்தை தவிர்ப்பதற்காகவே நம் முன்னோர்கள் கால்களை ஆட்டுவது குடும்பத்திற்கு ஆகாது என்று கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: முதுகு வலி, மூட்டு வலியை விரட்டி அடிக்கும் ராகி பால்.! எப்படி செய்யலாம்.!?