மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரும்புச்சத்து நிறைந்த டோஃபு சாண்ட்விச்.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!
இரும்புச்சத்து அதிகமுள்ள, இறைச்சிக்கு மாற்றாக சாப்பிடும் சுவையான டோஃபு சாண்ட்விச் எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி தற்போது காண்போம்.
டோஃபு என்பது சோயா பீன்ஸ் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு தயிராகும். மேலும், புரதங்கள் நிரம்பிய டோஃபு இறைச்சிக்கு மாற்றாக சாப்பிட சிறந்த உணவு வகையாகும். இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
சோள முத்துக்கள் - 1 கைப்பிடி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கேரட் - 1
உதிர்த்த டோஃபு - 1/2 கப்
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கோதுமை பிரட் துண்டுகள் - 4
செய்முறை :
★முதலில் கேரட், குடை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
★பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
★அடுத்து வெங்காயம் நன்றாக வதங்கியதும், நறுக்கி வைத்த கேரட், குடைமிளகாய் மற்றும் சோள முத்துக்கள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
★பின் அதனுடன் உதிர்த்து வைத்த டோஃபு சேர்த்து கிளறி நன்கு மசிக்க வேண்டும்.
★இவை அனைத்தும் நன்கு ஆறியதும் பிரெட் துண்டுகளின் நடுவில் வைத்து எண்ணெய் தடவி, தோசைக் கல்லில் போட்டு டோஸ்ட் செய்தால் சுவையான டோஃபு சான்ட்விச் தயாராகிவிடும்.