மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்யாண வீட்டின் ஸ்பெஷலான தக்காளி கூட்டு.!
இந்த தக்காளி கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். இதை ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய்
கொத்தமல்லி, கருவேப்பிலை -சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் -2
பச்சை மிளகாய் -4
தக்காளி - 1/2 கிலோ
செய்முறை :
முதலில் பாசிப்பருப்பை கழுவி குக்கரில் நன்றாக 4 விசில் வரும் வரையில் வேக வைக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் 3 டீஸ்பூன் எண்ணெய், சோம்பு, கடுகு ஆகியவற்றை சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, வதக்கிக் கொள்ளவும். பின்னர் தக்காளி சேர்த்து 10 நிமிடங்கள் வரையில் வதக்கிக் கொள்ளவும். இதனை தொடர்ந்து, அதில் மஞ்சள் தூளை சேர்த்து, நன்றாக வதங்கியவுடன், சாம்பார் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் இதனை நன்றாக கிளறி விடவும். இப்போது வேக வைத்த பருப்பை அதில் சேர்த்து, 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து கடைசியாக கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்தால், சுவையான தக்காளி கூட்டு தயார்.