மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொழுப்பை கரைத்து உடல் எடையை கிடுகிடுவென குறைக்க சுவையான சூப் இதோ! ட்ரை பண்ணுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்...
இன்றைய கால கட்டத்தில் உடல் எடையை குறைப்பது என்பது பலருக்கும் பெரிய சவாலாக உள்ளது. எடை குறைப்பதற்காக பலரும் பலவிதமான முயற்சிகள் செய்து வருகின்றனர். இவ்வாறு உடல் எடையை வேகமாகக் குறைக்க எளிமையான முட்டைகோஸ் சூப் இதோ.. இதை தினமும் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தினை உணரலாம்.
தேவையான பொருட்கள்:
1. முட்டைகோஸ் - 1 கப்
2. இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
3. மிளகு - 1 ஸ்பூன்
4. சீரகம் - 1 ஸ்பூன்
5. எண்ணெய் - தேவையான அளவு
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டைகோஸை பொடியாக நறுக்கி பின்னர் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் இதனுடன் நறுக்கிய முட்டைகோஸ், தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
நன்கு தண்ணீர் கொதித்து வாசம் வந்ததும், இறக்கி பரிமாறினால் சுவையான முட்டைகோஸ் சூப் ரெடி.