மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒல்லியாக தெரியனுமா.? அப்போ இதை பண்ணுங்க.!
யாருக்குத்தான் ஒல்லியாக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்காது. டயட், உடற்பயிற்சி என்று முயற்சித்தாலும், உங்களை ஒல்லியாக காட்ட முடியலையா? அப்போ இந்த மாதிரி பண்ணுங்க. முதலில் முதுகை வளைக்காமல் நேராக நடக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
மேலும், நாம் உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதன் மூலம் நம்மை ஒல்லியாகக் காட்ட முடியும். ஜீன்ஸ், ஸ்லீவ்லஸ் டாப் அணிந்து இடுப்பில் ஒரு துணியை கட்டுவது உங்களை ஒல்லியாக காட்டும். இப்படி லேயர் லேயராக உடைகளை அணிவது ஒல்லியாக காட்டும்.
மேலும் கருப்பு நிற ஆடைகள், உடலோடு ஒட்டிய ஷேப்வேர்ஸ் இவையெல்லாம் வயிறு, தொடையை சுற்றியுள்ள கொழுப்பை கட்டுப்படுத்த உங்கள் உடலை ஒரு வடிவாகக் காட்ட உதவுகிறது. பொருத்தமான உள்ளாடைகள் அணிவது உங்களை ஒல்லியாக காட்டும்.
உயரமான ஜீன்ஸ் அணிவதால் உங்கள் கால்கள் நீளமாக தெரியும். செங்குத்துக் கோடுகள் உள்ள ஆடைகள் அணியலாம். தளர்வான ஆடை அணிந்து சட்டையை ஒரு பக்கமாக டக் செய்து கொள்வது உங்களை ஒல்லியாக காட்ட உதவும்.